கொண்டை கடலை குருமா / CHICK PEAS KURUMA

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

கொண்டை கடலை         -      200 கிராம்

தண்ணீர்                    -      3 கப்

காய்ந்த நெல்லிக்காய்      -      2

உப்பு                       -      தேவையான அளவு

வெங்காயம்               -      1

தக்காளி                   -      1

இஞ்சி பூண்டு விழுது       -      ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள்               -      ¼  தேக்கரண்டி

மிளகாய் தூள்              -      ½ தேக்கரண்டி

கரம் மசால தூள்           -      ¼  தேக்கரண்டி

பச்சை மிளகாய்            -      2

தண்ணீர்                    -      1 கப்

தேங்காய் எண்ணெய்      -      2 தேக்கரண்டி

உப்பு                       -      தேவையான அளவு

அரைக்க

ஏலக்காய்                   -      2

பட்டை                     -      1 இஞ்

மிளகு                      -      4

கிராம்பு                    -      2

பே லீஃப்                    -      2

ஜீரகம்                      -      1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம்               -      1 தேக்கரண்டி

வத்தல்மிளகாய்           -      2

மல்லி தளை               -      சிறிது

செய்முறை

கொண்டை கடலையை தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

காய்ந்த நெல்லிக்காய சோ்க்க வேண்டும்.

பின்பு குக்கரில் கொண்டை கடலை தண்ணீர் சேர்க்க வேண்டும்

உப்பு சேர்க்க வேண்டும்.

18 – 20 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்

அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

அரைக்க தேவையான பொருட்களை ஒரு கடாயில் எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும்

நன்றாக  வறுத்துக்கொள்ள வேண்டும்

அதன் பின் இறக்கி ஆற வைக்கவும் ஆறியதும் அவற்றை மிக்சி ஜாரில் எடுத்து அரைக்கவும்

குக்கரை  திறக்கவும்  இப்பெழுது கொண்டை கடலை நன்றாக வெந்திருக்கும்

பானில் சிறிது எண்ணெய்  சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்

வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

வெங்காயம் வதங்கியதும்.தக்காளி சேர்க்க வேண்டும்

தக்காளியையும் நன்கு  வதக்க வேண்டும்


மஞ்சள்பொடி  வத்தல் மிளகாய் பொடி கரம் மசால தூள்  மற்றும் அரைத்த மசாலா சேர்க்க வேண்டும்

நன்கு  வதக்க வேண்டும்.பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்

வேகவைத்த கொண்டை கடலை சேர்க்க வேண்டும்

வேகவைக்க வேண்டும்

உப்பு சேர்க்க வேண்டும்

தண்ணீர் சேர்க்க வேண்டும்

குழம்பு சிறிது கெட்டியாகும் வரை  மூடி வைத்து  வேகவைக்க வேண்டும்

குழம்பு சிறிது கெட்டியானதும் மல்லி இலை போட்டு இறக்கவும்

இப்போது கொண்டை கடலை   குருமா ரெடி!!!!! கொண்டை கடலை குருமாவை பூரியுடன் பரிமாறவும்.

 

.