பீர்க்கங்காய் குழம்பு / RIDGE GOURD CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sun samayal ridge gourd

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய்          –        3 கப்

வெங்காயம்          –        2

தக்காளி              –        3/4 கப்

எண்ணெய்           –        தேவையான அளவு

உப்பு                 –        தேவையான அளவு

கறி வேப்பிலை       –        1 கொத்து

கடுகு                –        1/2 தேக்கரண்டி

ஜீரகம்               –        1/2 தேக்கரண்டி

பெருங்காயம்         –        ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள்         –        1/8 தேக்கரண்டி

மிளகாய் தூள்        –        3/4 தேக்கரண்டி

எள்                  –        11/2 தேக்கரண்டி

செய்முறை

02 sun samayal ridge gourd

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு மற்றும் ஜீரகம் சேர்க்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் சேர்க்க விரும்பினால் அதனையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

03 sun samayal ridge gourd

பின்பு நறுக்கிய பீர்க்கங்காய் சேர்க்கவும். 3 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்.

04 sun samayal ridge gourd

நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

05 sun samayal ridge gourd

4 நிமிடங்கள் வதக்கவும்.

06 sun samayal ridge gourd

பின்பு மூடி வைத்து குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்.

08 sun samayal ridge gourd

எள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

09 sun samayal ridge gourd

குழம்பு கெட்டியாகும் வரை அல்லது பீர்க்கங்காய் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்.

.