முட்டை குழம்பு / EGG CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sun samayal egg curry

தேவையான அளவு

முட்டை                      –        5

வெங்காயம்                  –        11/2 கப்

தக்காளி                      –        1 கப்

எண்ணெய்                    –        2 மேஜைக்கரண்டி

பே லீஃப்                      –        1

பட்டை                       –        1

ஏலக்காய்                     –        2

கிராம்பு                       –        2

இஞ்சி பூண்டு விழுது         –        11/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்                –        11/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்            –        1 தேக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

நீர்                           –        11/4 கப்

வெந்தயக் கீரை              –        1/4 தேக்கரண்டி

மல்லி தளை               –        1 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sun samayal egg curry

வெங்காயத்தை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்.

03 sun samayal egg curry

 

விழுதாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

04 sun samayal egg curry

அதே ஜாரில் தக்காளியை எடுத்துக் கொள்ளவும்

05 sun samayal egg curry

அதனையும் விழுதாக அரைத்து தனியே வைக்கவும்.

06 sun samayal egg curry

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த முட்டை சேர்த்து லேசாக பொரித்துக் கொள்ளவும்.

07 sun samayal egg curry

அதன் பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பே லீஃப், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

08 sun samayal egg curry

அதனுடன் வெங்காய விழுது சேர்க்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

09 sun samayal egg curry

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

10 sun samayal egg curry

தக்காளி விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

11 sun samayal egg curry

மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.

12 sun samayal egg curry

மசாலாக்களின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

13 sun samayal egg curry

 

தேவையான அளவு நீர் சேர்த்து எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும். உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.

14 sun samayal egg curry

பின்பு முட்டை சேர்க்கவும். விரும்பினால் வெங்காயக் கீரை சேர்த்துக் கொள்ளவும். மூடி வைத்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்பு மல்லித் தளை சேர்க்கவும்.

01 sun samayal egg curry

முட்டை குழம்பு ரெடி!!!!!!!

.