காளான் குழம்பு / MUSHROOM CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sunsamayal mushroom recipe

தேவையான பொருட்கள்

காளான்                       –        12

பச்சை பட்டாணி / முந்திரி    –        1/4 கப்

வெங்காயம்                   –        3/4 கப்

தக்காளி                      –        1

இஞ்சி பூண்டு விழுது          –        1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்               –        1

கறி வேப்பிலை               –        2 கொத்து

கடுகு                         –        1/4 தேக்கரண்டி

ஜீரகம்                        –        1/2 தேக்கரண்டி

எண்ணெய்                    –        3 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                –        3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                  –        ஒரு சிட்டிகை

கரம் மசாலா                  –        1 தேக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

எலுமிச்சை சாறு             –        1 தேக்கரண்டி

செய்முறை

02 sunsamayal mushroom recipe

பானில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். ஜீரகம் மற்றும் விரும்பினால் கடுகு சேர்க்கவும்.

03 sunsamayal mushroom recipe

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

04 sunsamayal mushroom recipe

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

05 sunsamayal mushroom recipe

பொன்னிறமாகும் வரை வதக்கவும்

06 sunsamayal mushroom recipe

பின்பு தக்காளி விழுது அல்லது நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

07 sunsamayal mushroom recipe

அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

08 sunsamayal mushroom recipe

கறி வேப்பிலை, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.குறைந்த தீயில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும் அல்லது கறி வேப்பிலையின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

10 sunsamayal mushroom recipe

அதனுடன் காளான், முந்திரி அல்லது பச்சை பட்டாணி சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்

11 sunsamayal mushroom recipe

2-3 நிமிடங்கள் நள்கு கிளறவும். பின்பு குறைந்த தீயில் மூடி வைத்து காளான் வேகும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்.

12 sunsamayal mushroom recipe

நீர் முழுவதும் ஆவியாகும் வரை வேக வைக்கவும். உப்பை சரிபார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

01 sunsamayal mushroom recipe

காளான் குழம்பு ரெடி!!!!!!!!!!!

.