பூரி மசாலா குழம்பு / PURI MASALA CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு       –        2 பெரியது

வெங்காயம்              –        1 பெரியது

தக்காளி                 –        1

இஞ்சி                   –        1 இன்ஞ்

பச்சை மிளகாய்         –        2-3 தேக்கரண்டி

கறி வேப்பிலை          –        1 கொத்து

கடுகு                   –        1 தேக்கரண்டி

ஜீரகம்                  –        1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு         –        2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு         –        1 தேக்கரண்டி

பெருங்காயம்            –        ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள்            –        1/2 தேக்கரண்டி

முந்திரி                 –        8 - 10

கடலை மாவு           –        2 தேக்கரண்டி

நீர்                     –        தேவையான அளவு

மல்லி தளை           –        2 மேஜைக்கரண்டி

எண்ணெய்             –        2 மேஜைக்கரண்டி

சர்க்கரை               –        1/2 தேக்கரண்டி

உப்பு                   –        தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 5-6 விசில் வரும் வரை வேக வைக்கவும்

பின்பு அதனை தோலுரித்து லேசாக மசித்துக் கொள்ளவும்

கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் குறைந்த தீயில் வைத்து கடுகைத் தாளிக்கவும்.

பின்பு கடலைப்பருப்பு, ஜீரகம், மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்.

கடலைப் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்

அதன் பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை சேர்க்கவும்.

பின்பு நறுக்கிய முந்திரி சேர்க்கவும்

நன்கு கிளறவும். பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு கிளறவும்

பின்பு கடலை மாவு சேர்க்கவும்

நன்கு கிளறவும்

தக்காளி சேர்க்கவும்

தேவையான அளவு நீர் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு 4-5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்

அதன் பின் உருளைக் கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்

அதனை மூடிவைத்து 4-5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.

பின்பு உப்பு சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது சர்க்கரை சேர்க்கவும்

இறுதியாக மல்லித் தளை சேர்க்கவும்

 

பூரி மசாலா குழம்பு ரெடி!!!!

.