கடலை மாவு தயிர்க் குழம்பு / GRAM FLOUR CURD CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

தயிர்                  –        1 கப்

நீர்                    –        2.5 கப்

கடலை மாவு         –        1.5 மேஜைக்கரண்டி

இஞ்சி                –        1 மேஜைக்கரண்டி

சர்க்கரை             –        1 மேஜைக்கரண்டி

உப்பு                  –        தேவையான அளவு

மல்லி தளை          –        தேவையான அளவு

தாளிக்க

பட்டை                –        1 இஞ்ச் துண்டு

கிராம்பு               –        2

கறி வேப்பிலை       –        1 கொத்து

பெருங்காயம்          –        1 சிட்டிகை

வத்தல்மிளகாய்      –        2

ஜீரகம்                 –        1/2 தேக்கரண்டி

கடுகு                  -        1/2 தேக்கரண்டி

வெந்தயம்             –        1/4 தேக்கரண்டி

நெய்                  –        1 மேஜைக்கரண்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது, தயிர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தளிக்கவும். பின்பு ஜீரகம், பட்டை, கிராம்பு, கறி வேப்பிலை, வத்தல் மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

பின்பு மெதுவாக அதனுடன் தயிர்க் கலவையை விடவும்.

நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும்.

பின்பு 5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

கடலை மாவு தயிர்க் குழம்பு ரெடி!!!!!!

.