தக்காளி குழம்பு / TOAMTO CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்       –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                        –        1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு            –        1 தேக்கரண்டி

சீரகம்                        –        ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை              –        ஒரு கொத்து

காயத் தூள்                 –        ¼ தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்             –        2

தக்காளி                        –        4

மிளகாய் தூள்             –        1 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்              –        2 மேஜைக்கரண்டி

மஞ்சள்தூள்              –        1 தேக்கரண்டி

உப்பு                       –        தேவைக்கு

சர்க்கரை                 –        1 தேக்கரண்டி

அரிசி மாவு              –        2 தேக்கரண்டி

நீர்                        –        தேவைக்கு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

கடுகு, ஜீரகம் மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்

வத்தல் மிளகாய் சேர்க்கவும்

கறி வேப்பிலை சேர்க்கவும்

பெருங்காயம் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

தக்காளி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்

உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

தக்காளி மசியும் வரை வதக்கவும்

பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

அதன் பச்சை வாசம் போகும் வரை நன்கு கிளறவும்

தேவையான அளவு நீ்ர் சேர்க்கவும்

நன்கு கலக்கி அதனை கொதிக்க வைக்கவும்

பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும்

அதனை குழம்புடன் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு அதனை மூடி வைத்து 5 நிமிடங்கள் அல்லது சிறிது நேரம் கூட வேக வைக்கவும்

 

தக்காளி குழம்பு ரெடி

Tomato Health Benefits And Minerals

.