தேங்காய் குழம்பு / COCUNUT CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்        –        1 மேஜைக்கரண்டி

கடுகு,                         –        1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு             –        1 தேக்கரண்டி

காயத் தூள்                   –        ஒரு சிட்டிகை

வெங்காயம்                    –        1

தக்காளி                            –        1

பச்சை மிளகாய்                  -       2

குழம்பு மசாலா தூள்        –        2 மேஜைக்கரண்டி

புளி                            –        1-2 மேஜைக்கரண்டி

உப்பு                           –        தேவையான அளவு

சர்க்கரை                     –        ½ தேக்கரண்டி

தேங்காய்                    –        ½ கப்

நீர்                           –        தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தேங்காயை மிக்சியில் போட்டு நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணயெ் விட்டு சூடனதும் கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்

பெருங்காயம் சேர்க்கவும்

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றம் தக்காளி சேர்க்கவும்

வெங்காயம் மென்மையாகும் வரை நன்கு கிளறவும்

பின்பு குழம்பு மசாலா தூள் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

தேவையான அளவு நீா் சேர்த்து நன்கு கலக்கவும்

சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்

சர்க்கரை சேர்க்கவும்

புளித் தண்ணீா சேர்க்கவும்

அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

தேங்காய் குழம்பு ரெடி!!!!

Coconut Health Benefits And Minerals

.