வாழைத்தண்டு குழம்பு / PLANTAIN STEM CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு        -      1 கப்(நறுக்கியது)

தக்காளி                -      1 (சிறியது)

வெங்காயம்          -      2 (சிறியது)

பூண்டு                   -      2 பற்கள்

இஞ்சி                        -      மிகச்சிறிய துண்டு

எண்ணெய்             -      2 மேஜைக்கரண்டி

சீரகம்                   -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை           -      1 கொத்து

மல்லித் தூள்           -      1 தேக்கரண்டி

ஜீரகத்தூள்             -      1தேக்கரண்டி

மிளகாய் தூள்            -      ½ தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்        -      2

மஞ்சள்தூள்              -      ஒரு சிட்டிகை

உப்பு                     -      தேவையான அளவு

சர்க்கரை               -      ஒரு சிட்டிகை

நீர்                      -      தேவையான அளவு

மல்லித்தளை         -      3 மேஜைக்கரண்டி(தாளிக்க)

செய்முறை

 

வாழைத்தண்டிலுள்ள கடினமான தோல் மற்றும் தேவையற்ற நார் பகுதிகளை நீக்கவும்.

 

பின்பு அதனை சிறிய துண்டுகளாள நறுக்கிக் கொள்ளவும்.

  

பின்பு அதனுடன் மோர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும் அப்போது வாழைத்தண்டு நறம் மாநறாமல் இருக்கும்

தக்காளி ஒரு வெங்காயம் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து மென்மையாக அரைக்கவும்.தேவையான நீர் விட்டு அரைக்கவும்


கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்பு ஜீரகம் சேர்க்கவும் பின்பு கறி வேப்பிலை மற்றும் உடைத்த வத்தல் மிளகாய் சேர்த்து வதக்கவும்

நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

அதனுடன் அரைத்த விழுது, உப்பு, சர்க்கரை, ஜீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்

தேவையான அளவு நீர் விட்டு பச்சை வாசம் போகும் வரை ஒரு மூடியால் மூடி வைத்து வேக வைக்கவும்

பின்பு ஊற வைத்த வாழைத் தண்டு சேர்த்து சில நிமிடங்கள் வுக வைத்து மல்லித்தளை தூவி இறக்கவும்

.