கொண்டை கடலை குழம்பு / CHICK PEAS CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை   -      2 கப்(வேக வைத்தது)

உப்பு                   -      தேவையான அளவு

அரைக்க

தேங்காய்              -      1 கப்

முழு கொத்த மல்லி     -      4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்          -      5

பட்டை                                -      1 (பெரிய துண்டு)

சோம்பு                               -      1 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்  -      1தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்            -      2 தேக்கரண்டி

வெங்காயம்         -      1(பெரியதாக நறுக்கியது) 10(சிறியதாக நறுக்கியது)

கறிவேப்பிலை        -      ஒரு கொத்து

பச்சை மிளகாய்          -      1

செய்முறை

கொண்டைக் கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்

 சோம்பு மற்றும் பட்டை சேர்க்கவும்

கொத்த மல்லி சேர்க்கவும்

காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்கவும்

பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

பின்பு தேங்காய் துருவல் சேர்க்கவும்

பொன்னிறமாகவும் வரை வறுக்கவும்

பின்பு அதனை அரைத்துக் கொள்ளவும்

மென்மையாக அரைக்கவும்

பின்பு வேக வைத்த கொண்டைக் கடலையை வேக வைத்த நீருடன் அதே கடாயில் விடவும்

அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைக்கவும்

வேறெரு கடாயில் ணெணெய் விட்டு சூடாக்கவும்

வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்


பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு அதனை கடலைக் கறியுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு பரிமாறவும்

 

Chick Peas Health Benefits And Minerals

.