காலிஃப்ளவர் குறுமா / CAULIFLOWER KURUMA
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
காலிஃப்ளவர் - 2 கப்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
கரமசாலா தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2மேஜைக்கரண்டி
தேங்காய்பால் - 1 கப்
மைதா மாவு - 1தேக்கரண்டி
மல்லித்தளை - தேவையான அளவு
செய்முறை
தேவையான பொருட்களைஎடுத்துக் கொள்ளவும்
முதலில் காலிஃப்ளவரை நீர் சேர்த்து வேக வைக்கவும்
பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும
;
அதனுடன் வெங்காயம் சேர்க்கவும்
பின்பு உப்பு சேர்க்கவும்
மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
பின்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும்
தக்காளி சேர்க்கவும்
நன்கு மசியும் வரை வதக்கவும்
வேக வைத்த காலிஃப்ளவரை சேர்க்கவும்
நன்கு கிளறவும்
;பின்பு தேங்காய் பால் சேர்க்கவும்
மிதமான சூட்டில் சிறிது நேரம் வைத்திருக்கவும்
மைதா மாவை நீர் சேர்த்து கலக்கவும்
அதனை குறுமாவுடன் சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
பின்பு மல்லித் தளை சேர்க்கவும்
நன்கு கலக்கவும்
;
பின்பு பரிமாறவும்