கத்தரிக்காய் சாம்பார் / BRINJAL SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

தேவையான பொருள்கள்

கத்தரிக்காய்                -      200 கிராம்

துவரம் பருப்பு               -      1 கப்

சின்ன வெங்காயம்          -      1

பெருங்காயம்               -        சிறிது

தக்காளி                    -      1

கறி வேப்பிலை             -      1 கொத்து

புளி                        -      ஒரு எலுமிச்சை அளவு

மிளகாய் தூள்              -      அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள்               -      அரை தேக்கரண்டி

சாம்பார் பொடி              -      3 தேக்கரண்டி

உப்பு                       -      தேவையான அளவு

தண்ணீா்                    -      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்       -      2 தேக்கரண்டி

கடுகு                       -      1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு            -      1 தேக்கரண்டி

கறி வேப்பிலை            -      1

வத்தல்மிளகாய்          -      2

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைத்து

 பின்பு கரைத்து வைத்துக்கொள்ளவும்

குக்கரில் சுத்தம் செய்த பருப்பை எடுத்துக்கொள்ளவும் பின்பு அதில் வெங்காயம் பெருங்காயம் மற்றும் தண்ணீா் சோ்த்து

வேகவைக்க வேண்டும்

கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி உப்பு தண்ணீாரில் 20 நிமிடம் ஊற வைக்கவும்

இப்போது பருப்பு வெந்திருக்கும் வேந்த பருப்பை நன்றாக மசித்துக்கொள்ளவும்

பின்பு அதனுடன் கத்திரிக்காயை சோ்க்கவும்

தக்காளி சோ்க்கவும்

உப்பு மற்றும் மஞ்சள்துள் சோ்க்கவும்  

 பின்பு குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.இப்போது காய்கறி நன்றாக வெந்திருக்கும்

அதனுடன் சாம்பார் பொடி மற்றும் புளி தண்ணீா் சோ்க்கவும்.

மிக்ஸ் செய்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்

பின்பு தாளிக்க தேவையான பெருட்களை எடுத்துக் கொள்ளவும்

பானில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு உளுந்து சோ்க்கவும்

கடுகு உளுந்து பொன்நிறமானதும்

 

காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சோ்க்கவும்

தாளித்த எண்ணெய்யை சாம்பாரில் சோ்க்கவும்

பின்பு மிக்ஸ் செய்து எடுக்கவும்   

 இப்போது சுவையான கத்திரிக்காய் சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.