கேரளா சாம்பார் / KERALA SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு                     -      1.25 கப்

சின்ன வெங்காயம்                -      1

பெருங்காயம்                     -        சிறிது

சிறிய வெங்காயம்                 -      12

வெண்டைக் காய்                 -      8

கத்தரிக்காய்                       -      5

தக்காளி                           -      2

கறி வேப்பிலை                   -      1 கொத்து

புளி                               -      ஒரு எலுமிச்சை அளபு

உப்பு                              -      தேவையான அளவு

தண்ணீா்                           -      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்               -      2 தேக்கரண்டி

கடுகு                              -      1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு                   -      1 தேக்கரண்டி

கறி வேப்பிலை                     -      1

வத்தல் மிளகாய்                   -      2

அரைக்க

தேங்காய் துருவல்                 -      1 கப்

சின்ன வெங்காயம்                 -      3

கறி வேப்பிலை                     -      12

மல்லி                             -      2 தேக்கரண்டி

ஜீரகம்                             -      1 தேக்கரண்டி

நல்ல மிளகு                       -      ¼ தேக்கரண்டி

பெருங்காயம்                      -      ¼ தேக்கரண்டி

வெந்தயம்                         -      ¼ தேக்கரண்டி

வத்தல்மிளகாய்                  -      4

தேங்காய் எண்ணெய்            -      3  தேக்கரண்டி

செய்முறை

அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்

பானில் எண்ணெய் சூடாக்கி அதில் 3 சிறிய வெங்காயம் சோ்க்க வேண்டும்

நன்றாக வதக்கவும்

ஜீரகம் மற்றும் வெந்தயம் சோ்க்கவும்

பின்பு கறிவேப்பிலை மற்றும் மல்லி சோ்க்கவும்

காயந்த மிளகாய் பெருங்காயம் சோ்க்கவும்

அனைத்தையும் பொன் நிறமாக வறுக்கவும்

பின்பு துருவிய தேங்காய் சோ்க்கவும்     

    

பொன் நிறமாக வறுக்கவும்

தேங்காய் ஆறியதும் மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

தண்ணீா் சோ்த்து

 விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இப்போது சாம்பார் மசாலா ரெடி

துவரம் பருப்பை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்

பின்பு குக்கரில் பருப்பு எடுத்து அதில் வெங்காயம் மற்றும் சிறிது பெருங்காயம் சோ்க்கவும்

தண்ணீா் சோ்க்கவும்

குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்


பருப்பு வெந்ததும் நன்றாக மசித்துக்கொள்ளவும்

பின்பு அதில் வெண்டக்காயை தவிர்த்து அனைத்து காய்களையும் சோ்க்கவும்

தண்ணீர் சோ்க்கவும்

மஞ்சள்தூள் சோ்க்கவும்

மிக்ஸ் செய்து

11 – 12 நிமிடம் வேகவைக்கவும்

இப்போது வெண்டக்காய் புளி தண்ணீா் சோ்க்கவும்

சாம்பார் மசாலா சோ்க்கவும்

கலக்கவும்

உப்பு சோ்க்கவும்


நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும்

மிதமான தீயில் சாம்பார் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்

15 நிமிடம் கொதிக்க வைக்கவும்

பின்பு தாளிக்க தேவையான பெருட்களை எடுத்துக் கொள்ளவும்

பானில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு சோ்க்கவும்

பின்பு உளுந்து காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சோ்க்கவும்

தாளித்த எண்ணெய்யை சாம்பாரில் சோ்க்கவும்

பின்பு மிக்ஸ் செய்து எடுக்கவும்   

 

இப்போது சுவையான கேரளா சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.