காய்கறி சாம்பார் / VEGETABLE SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

 

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்              -              1 மேஜைக்கரண்டி

வெங்காயம்                                -              1நறுக்கியது)

தக்காளி                                         -              2(நறுக்கியது)

பச்சை மிளகாய்                          -              2

கத்தரிக்காய்                              -              1 (நறுக்கியது)

காரட்                                                 -              2 (நறுக்கியது)

பீன்ஸ்                                               -              6(நறுக்கியது)

வெள்ளரிக்காய்                          -              1 கப்(தோலுரித்து நறுக்கியது)

வெண்டைக்காய்                       -              4 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு                    -              2(தோலுரித்து நறுக்கியது)

மாங்காய்                                      -              1 கப்(தோலுரித்து நறுக்கியது)

வாழைக்காய்                             -              1(தோலுரித்து நறுக்கியது)

துவரம் பருப்பு                           -              1 கப் (வேக வைத்தது)

சாம்பார் தூள்                            -              3 மேஜைக்கரண்டி

உப்பு                                                             தேவையான அளவு

வெல்லம்                                     -              2 தேக்கரண்டி

மல்லித்தளை                       -              கைப்பிடியளவு

நீர்                                                      -            தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்           -              2 மேஜைக்கரண்டி

கடுகு,                                              -              1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு                    -              1 தேக்கரண்டி

சீரகம்                                              -              1 தேக்கரண்டி

சிவப்பு வத்தல் மிளகாய்   -            2

 

காயத் தூள்                            -              1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை                         -            ஒரு கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு அனைத்து காய்கறிகளையும் சேர்க்கவும்

அவற்றை 8-10 நிமிடம் வதக்கவும்

நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

காய்கறி வெந்து விட்டது

பின்பு வேக வைத்த துவரம் பருப்பை சேர்க்கவும்

பின்பு அதனுடன் சாம்பார் தூள் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனுடன் வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும்

நன்கு கலக்கி 15- 20 நிமிடம் சிம்மில் வைக்கவும்

பின்பு தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்

கடுகு, உழுத்தம் பருப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து தாளிக்கவும்

பின்பு சிவப்பு வத்தல் மிளகாய் சேர்க்கவும்

பின்பு காயத்தூள் சேர்க்கவும்

பின்பு சிறது கறி வேப்பிலை சேர்க்கவும்

அதனை சாம்பாரில் விடவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனுடன் நறுக்கிய மல்லித்தளை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு சிறிது நேரம் மூடி வைக்கவும்

சாம்பார் ரெடி

.