இட்லி பொடி / IDLI PODI

Posted in பொடி வகைள் (இட்லி தோசை பொடி etc)

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு       –        1 கப்

துவரம் பருப்பு          –        1/3 கப்

வத்தல் மிளகாய்         –        8

பூண்டு                      –        6

கறிவேப்பிலை         –        கைப்பிடியளவு

காயத் தூள்            –        1 தேக்கரண்டி

உப்பு                    –        தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்  –        ½தேக்கரண்டி + ½தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

முதலில் வத்தல் மிளகாயை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்

பின்பு கறி வேப்பிலையை வறுத்துக் கொள்ளவும்

பின்பு அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்பு அதே கடாயில் சில துளிகள் எண்ணெய் விடவும்

உழுத்தம் பருப்பை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்பு மீண்டும் அதே கடாயில் சில துளிகள் எண்ணெய் விடவும்

துவரம் பருப்பை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்

அதனையும் அதே தட்டில் வைக்கவும்

பின்பு அனைத்தையும் சிறிது நேரம் ஆற வைக்கவும்

பின்பு மிக்சியை எடுத்துக் கொள்ளவும். அதில் பூண்டு, கறி வேப்பிலை மற்றும் வத்தல் மிளகாய் சேர்க்கவும்

சிறிது பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனுடன் உழுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் சிறிது கறிவேப்பலை சேர்க்கவும்

அதனுடன் உப்பு சேர்க்கவும்

நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனை மூடியுள்ள டப்பாவில் அடைத்து வைத்து தேவைக்கு பயன்படுத்தலாம் 

Black Beans Health Benefits And Minerals

.