நிலக்கடலை சட்னிப் பொடி/ PEANUT CHUTNEY POWDER

Posted in பொடி வகைள் (இட்லி தோசை பொடி etc)

06 sun samayal pea nut chutney powder

தேவையயான பொருட்கள்

நிலக்கடலை                     -               1 கப்

மிளகாய் தூள்                  -               2 தேக்கரண்டி

கறிவேப்பிலை                 -               1 கப்

காயத் தூள்                    -               நிலக்கடலைஅளவுதுண்டு

புளி                                   -               1இன்ஞ்துண்டு

சமயல்எண்ணெய்           -               1 தேக்கரண்டி

உப்பு                                 -               தேவையானஅளவு

செய்முறை

01 sun samayal pea nut chutney powder

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

02 sun samayal pea nut chutney powder

அடி கனமான  பாத்திரத்தை  எடுத்து  அதில்  நிலக்கடலையை  போட்டு  மிதமான  சூட்டில்  வறுத்து  எடுக்கவும்.  பின்பு அதனை  ஆறவைக்கவும்

பின்பு  பெருங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தின் மீது 1 துளி  அல்லது   2 துளி  எண்ணெய் சேர்த்து விட்டு வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் சிறிது மிளகாய் தூள் தூவவும்.

03 sun samayal pea nut chutney powder

 

பின்பு கறிவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து அதனை துணியால் நன்கு துடைத்து அதனை  கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும். நிறம் மாறும் வரை வறுக்கவும்

04 sun samayal pea nut chutney powder

பின்பு அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.

05 sun samayal pea nut chutney powder

பின்பு அதனை நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்

06 sun samayal pea nut chutney powder

நிலக்கடலை சட்னி தூள் ரெடி

Peanuts Health Benefits And Minerals

.