பூண்டு மிளகாய்த் துவையல் / GARLIC CHILLI THOGAYAL

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

சிவப்பு மிளகாய்            -      20

பூண்டு                    -      10 பற்கள்

கல் உப்பு                 -      முக்கால் மேசைக்கரண்டி

நல்லெண்ணெய்        -      ஒரு மேசைக்கரண்டி

கடுகு,உளுத்தம் பருப்பு  

 

கறிவேப்பிலை           -      சிறிதளவு

செய்முறை

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் சிவப்பு மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.

பிறகு அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

அரைத்த துவையலை தாளித்த கடுகு உளுத்தம் பருப்புடன் சேர்த்து, மிக்ஸியைக் கழுவிய தண்ணீரையும் ஊற்றி, கரைத்துக் கொள்ளவும். சுவையான, காரசாரமான பூண்டு மிளகாய்த் துவையல் தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.

ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் 4 அல்லது 5 நாட்கள் வரைக்கும் கூட உபயோகப்படுத்தலாம். பூண்டு வாசனையுடன் நன்றாக இருக்கும்.

அரைத்த அதே தினத்தில், நல்ல காரமாக இருக்கும். அரைத்த மறுநாளிலிருந்து உப்புச் சுவை அதிகரிக்கும்.

Red Chilly Health Benefits And Minerals

Garlic Health Benefits And Minerals

.