தெங்காய நீல்லு பரமானம்

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

இளநீர்            -        2

பால்              -        1 லி

சர்க்கரை         -        200 கிராம்.

எப்படி செய்வது

தண்ணீர் மற்றும் வழுக்கையுடன் கூடியதாக இளநீரை வாங்க வேண்டும். நீர் தனியாகவும்வழுக்கை தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். பாலில் சர்க்கரையைப் போட்டு மிதமான தீயில் நன்கு காய்ச்சுங்கள். 1 லிட்டர் பால் அரைலிட்டர் ஆகும் வரை காய்ச்ச வேண்டும்.  அடுத்துஒரு துண்டு வழுக்கையை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை இளநீரில் போட்டு மிதமான தீயில் வேக வையுங்கள். இளநீர் பாதியாகும் வரை வேகவைக்க வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையை பாலில் கலந்துஎடுத்து வைத்த வழுக்கைத் துண்டை சிறுசிறு பீசாக வெட்டிப் போட்டுஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள். தெங்காய நீல்லு பரமானம் ரெடி

Milk Health Benefits And Minerals

.