நல்லேரு ஊர்ப்பிண்டி

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

பிரண்டை                 -       1 கட்டு

புளி                          -       நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய்      -      4

பூண்டு                     -       8 பல்

தனியா                    -       1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு     -      2 டேபிள்ஸ்பூன்

கடுகு,                       -       1 டேபிள் ஸ்பூன்

தேங்காய்                 -       1துண்டு

உப்பு                        -       தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் -       50 கிராம்.

எப்படி செய்வது

பிரண்டையை நார் எடுத்துசிறு சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். தேங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்  கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு பிரண்டையை நன்றாக வதக்குங்கள். பொன் முறுகலாக வரும் பதத்தில் இறக்கி  தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அதே வாணலி யில் உளுந்துதனியாகாய்ந்த மிளகாய்பூண்டு ஆகியவற்றைப் போட்டு வறுத்து ஆறவையுங்கள்.  இதோடு பிரண்டைபுளிதேங்காய்உப்பு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின் வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றிகடுகு போட்டுத் தாளித்து அரைத்த விழுதைப் போட்டு கிளறி இறக்குங்கள். நல்லேரு ஊர்ப்பிண்டி ரெடி.

Tamarind Health Benefits And Minerals

.