ஜவ்வரிசி புலாவ் / SABUDANA PALAO

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி                         -      ஒரு கப்

நிலக்கடலை                     -      75 கிராம்

வெங்காயம்                       -      2

காரட்                            -      2

உருளைக்கிழங்கு                 -      ஒன்று

குடை மிளகாய்                   -      2

தக்காளி                          -      2 (நடுத்தர அளவு)

கடுகு,                            -      ஒரு தேக்கரண்டி

தயிர்                             -      ஒரு கப்

நெய்                              -      50 கிராம்

பன்னீர்                           -      100 கிராம்

 முந்திரி                          -      50 கிராம்

கடலைப் பருப்பு                   -      ஒரு தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு                   -      ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை ,                   -      ஒரு கொத்து

தேங்காய் எண்ணெய்             -      3 தேக்கரண்டி
தண்ணீர்                          -      அரை லிட்டர்

உப்பு                               -      தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஜவ்வரிசியை ஒரு கப் தயிருடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 45 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • தக்காளி, காரட், உருளைக்கிழங்கு இவற்றை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
  • குடைமிளகாயையும் நீளவாக்கில் அரிய வேண்டும்.
  • கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெங்காயம் நறுக்கி வைத்த காய்கறிகள் இவற்றை வதக்கி உப்பு சேர்த்து 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
  • பிறகு நிலக்கடலையை சுத்தம் செய்து உடைத்து ஜவ்வரிசியுடன் (ஊறவைத்தது) சேர்த்து கடாயில் சேர்த்து கிளறவும்.
  • தனியாக பனீரை எண்ணெயில் பொரித்து அதையும் இதனுடன் சேர்த்து கிளறி 10 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
  • கறிவேப்பிலை தூவினால் மணம் கூடும்.
  • ஜவ்வரிசி ஊறுவதற்கு மட்டுமே அதிக நேரம் தேவை. ஊறிவிட்டால் 15 நிமிடங்களில் செய்து விடலாம்.
  • Peanuts Health Benefits And Minerals
  • Carrot Health Benefits And Minerals
.