பத்தியக் கஞ்சி / PATHIYA KANJI

Posted in பிற வகைகள்

 

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி              -      1/4 கப்

பாசிப்பருப்பு              -      2 தேக்கரண்டி

வெந்தயம்                        -      1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம்      -      5 - 6

வெள்ளைப் பூண்டு     

 மோர்                   -      1 - 1.5 கப்

உப்பு                     -      தேவையான அளவு

செய்முறை

  • வெங்காயம், பூடு இரண்டையும் தோலுரித்து, பொடியாக நறுக்கவும்.
  • பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
  • காலையில் புழுங்கலரிசியை களைந்து, அத்துடன் ஊற வைத்த வெந்தயம், பாசிப்பயறு, நறுக்கிய வெங்காயம், பூடு, எல்லாவற்றையும் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் 4-5 விசில் வர விடவும்.
  • விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து, குழைவாக வெந்திருக்கும் கஞ்சியை, நன்றாக மசிக்கவும்.
  • ஆறியதும், உப்பும் மோரும் கலந்து, பருகக் கொடுக்கவும்.

Note:
தொடர்ந்த வயிற்று வலி, அல்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி, புண் குணமாகும்.

Small Onion health benefits and minerals

.