வடா பாவ் / VADA PAV

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு               -      2 (வேகவைத்து மசித்த்து)

காரட்                                -      2

 பச்சைப் பட்டாணி          -      2 கப்

பீன்ஸ்                              -      10

வெங்காயம்                    -      1

 மல்லித்தளை   

 

நல்ல மிளகு                   -      1 டீஸ்பூன்

கரமசாலா தூள்              -      2  டீஸ்பூன்

உப்பு                          -      தேவையான அளவு

பச்சை மிளகாய்                  -      2

இஞ்சி-பூண்டு விழுது  தலா    -      1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு              -      ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்        -      தேவையானவை,

வெண்ணெய்                     -      2 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை                    -      3 டேபிள் ஸ்பூன் (வறுத்து உடைத்தது)

வட்டமான  பன்               -      4. 

செய்முறை

காய்கறிகளை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்பச்சை மிளகாய்இஞ்சிபூண்டு விழுதுகரம் மசாலாத்தூள்வேகவைத்த காய்கள்மசித்த கிழங்குஉப்புகொத்தமல்லி தழை சேர்த்து வதக்கிஇறக்கிய பின்

 எலுமிச்சை சாறு சேர்த்துஆறியதும் ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு எடுத்து வட்டமாக அழுத்தி உருட்டி தட்டி (கட்லெட்டாக) ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த கட்லெட்டுகளையும் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் 

திருப்பிப்போட்டு சிவக்க எடுக்கவும். பாவ்பன் அல்லது சாதா பன்னை பாதியாக நறுக்கி அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் வேர்க்கடலையை தூவி அதற்கு மேல் கட்லெட் வைத்து மறுபடியும் வேர்க்கடலை தூவி மறுபாதியால் லேசாக அழுத்தி மூடவும். 

தக்காளி சாஸுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

கூடுதல் சிறப்பு: பாவின் மத்தியில் வடாவை வைப்பதற்கு முன் பாவை வெண்ணெய் தடவிய தவாவின் மேல் வைத்து இருபுறமும் சூடு செய்தபின் பாவை வைத்து மூடவும். 

இது சூடாகவும்சுவையாகவும் இருக்கும்.

Potatoes health benefits and minerals

Carrot Health Benefits And Minerals

.