English Category

நிலக்கடலை சட்னி

Posted in சட்னி வகைகள்

07 sunsamayal peanut chutney

தேவையான பொருட்கள்

நிலக்கடலை           –        3/4 கப்

எண்ணெய்             –        11/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு        –        3/4 தேக்கரண்டி

பூண்டு                 –        2 பற்கள்

பச்சை மிளகாய்        –        2      

உப்பு                   –        தேவையான அளவு

ஜீரகம்                  –        1/2 தேக்கரண்டி

புளி                    –        விரும்பினால்

கறி வேப்பிலை         –        2 கொத்து

தாளிக்க

கடுகு                  –        1/4 தேக்கரண்டி

வத்தல் மிளகாய்       –        1

உழுத்தம் பருப்பு        –        1 தேக்கரண்டி

பெருங்காயம்           –        1 சிட்டிகை

செய்முறை

01 sunsamayal peanut chutney

நிலக்கடலையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

02 sunsamayal peanut chutney

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் பச்சை மிளகாய், வத்தல் மிளகாய், கறி வேப்பிலை, உழுத்தம் பருப்பு மற்றும் பூண்டு சேர்க்கவும். அவற்றின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். உழுத்தம் பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் ஜீரகம் சேர்க்கவும்.

04 sunsamayal peanut chutney

அதனை நிலக்கடலையுடன் சேர்க்கவும்.

03 sunsamayal peanut chutney

அதே பானில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வத்தல் மிளகாய், கறி வேப்பிலை மற்றும் உழுத்தம் பருப்பு சேர்த்து அது பொன்னிறமானதும் தீயை அணைத்து விட்டு பெருங்காயம் சேர்தத்து தனியே வைக்கவும்.

05 sunsamayal peanut chutney

நிலக்கடலை கலவையை மிக்சியில் போடவும்.

06 sunsamayal peanut chutney

புளி சேர்க்க விரும்பினால் அதனை நீரில் ஊற வைத்து அந்த நீரை நிலக்கடலையுடன் சேர்த்துக் கொள்ளவும். இல்லாவிட்டால் நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

07 sunsamayal peanut chutney

பின்பு தாளித்த கடுகு கலவையை சேர்த்து நன்கு கலக்கவும். நிலக்கடலை சட்னி ரெடி!!!!!!!!!!!

Tamil Category

.