பச்சை மிளகாய் சட்னி / GREEN CHILLI CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய்        –        250 கிராம்

பூண்டு                 –        10 பற்கள்

ஜீரகம்                 –        1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்          –        ஒரு சிட்டிகை

உப்பு                   –        தேவையான அளவு

வினிகர்               –        1 தேக்கரண்டி

எண்ணெய்            –        தேவையான அளவு

தேங்காய்             –        விரும்பினால்

செய்முறை

பச்சை மிளகாயை எண்ணெயில் போட்டு  பொரித்துக் கொள்ளவும்

மிளகாய் பொரிந்ததும் அதனுடன் மஞசள் தூள், பூண்டு மற்றும் ஜீரகம் சேர்க்கவும்

அனைத்தும் ஆறியதும் அவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்.

வினிகர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் சட்னி ரெடி!!!!!!!!

.