பீட்ரூட் சட்னி / BEETROOT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

பீட்ரூட்              –        11/2 கப்

பச்சை மிளகாய்     –        2

வத்தல் மிளகாய்    –        3

கறி வேப்பிலை     –        1 கொத்து

ஜீரகம்              –        1/2 தேக்கரண்டி

பூண்டு              –        1 பல்

கடலைப் பருப்பு     –        11/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு     –        11/2 தேக்கரண்டி

உப்பு                 –        தேவையான அளவு

எண்ணெய்          –        தேவையான அளவு

எலுமிச்சை சாறு    –        தேவையான அளவு

செய்முறை

பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வெதக்கவும். பச்சை மிளகாய், வத்தல் மிளகாய்,  கறி வேப்பிலை மற்றும் பூண்டு சேர்க்கவும். பூண்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்

ஜீரகம் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற வைக்கவும்.

அதே பானில் பீட்ரூட் துண்டுகளை போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்

பின்பு பீட்ரூட் மற்றும் தாளித்த பருப்பு கலவையில் 3/4 அளவும் மிக்சியில் போட்டு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து  ஒருமுறை கூட அரைத்துக் கொள்ளவும்.

தாளித்த பருப்பு கலவை சேர்க்கவும். பீட்ரூட் சட்னி ரெடி!!!!!!!

.