பேரீட்சை புளி சட்னி / DATES TAMARIND CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான அளவு

பேரீட்சை               -       5 - 6 (கொட்டை நீக்கியது)

புளி                     -       ஒரு நெல்லிக்காய் அளவு

துருவிய வெல்லம்      -       3 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள்          -       1 டீஸ்பூன்

பெருங்காயம்           -       ஒரு சிட்டிகை

உப்பு                    -       2 டீஸ்பூன்

செய்முறை

புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

பேரிச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.

அடிகனமான வாணலியில் வெல்லத்தை கரைத்து கொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.

வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித்தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம்பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு, வெல்லக் கரைசலையும் விடவும்.

கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித்ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

DATES HEALTH BENEFITS AND MINERALS

.