கேரளா தேங்காய் சட்னி / KERALA COCONUT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல்          -    1 கப்

மிளகாய் தூள்               -    2 தேக்கரண்டி

இஞ்சி                         -    1 இன்ஞ் துண்டு

பூண்டு                         -    4 பற்கள்

சின்ன வெங்காயம்         -    2

உப்பு                            -    தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்      -    1 மேஜைக்கரண்டி

கடுகு                          -    1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு              -    1 தேக்கரண்டி

கறிவேப்பிலை              -    1 கொத்து

சின்ன வெங்காயம்       -    2 மேஜைக்கரண்டி(நறுக்கியது)

செய்முறை

;தேங்காய் துருவலை அரைப்தற்கு எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும்

வெங்காயம் சேர்க்கவும்

மிளகாய் தூள் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்

அரைத்த விழுதை அதனுடன் சேர்க்கவும்

 

நன்கு கலக்கவும்

பின்பு பரிமாறவும்

Coconut Health Benefits And Minerals

.