நிலக்கடலை சட்னி / PEANUT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

நிலக்கடலை            -      1 கப்

காய்ந்த மிளகாய்            -      3

பூண்டு                  -      2 பற்கள்

வெங்காயம்             -      1 துண்டு

புளி                     -      1 சிறு துண்டு

உப்பு                    -      தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்   -      1 மேஜைக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்   -      2 மேஜைக்கரண்டி

கடுகு                   -      1 தேக்கரண்டி

பெருங்காயம்           -      1/4தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு        -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          -      ஒரு  கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

;கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

அதில் நிலக்கடலையைப் போட்டு பொரிக்கவும்

பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

அதை தனியே எடுத்து வைக்கவும். பின்பு  பூண்டு மற்றும் காய்ந்த மிளகு சேர்க்கவும்

ஒரு நிமிடம் வைக்கவும்

அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும்

சிறிது நேரம் வைத்திருக்கவும்

 

;பின்பு நிலக்கடலையை எடுக்கவும்

அதனுடன் வதக்கியவற்றையும் சேர்க்கவும்

அதனுடன் புளி சேர்க்கவும்

பின்பு உப்பு சேர்க்கவும்

பின்பு அவற்றை சேர்த்து அரைக்கவும்


சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொளளவும்

அதை தனியே எடுத்து வைக்கவும்

;

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும

கடுகு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்

பின்பு காயப் பொடி சேர்க்கவும்

பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும்

பின்பு அதனை சட்னியின் மீது ஊற்றவும்

;நன்கு கலக்கவும்

 

 பின்பு பரிமாறவும் 

.