காரட் சப்பாத்தி / CARROT CHAPTHI

Posted in சப்பாத்தி வகைகள்

தேவையான பொருள்கள்

காரட்                       -    2

கோதுமை மாவு             -      1.5 கப்

மல்லித்தளை              -      கால் கப்

வெங்காயம்                -      கால் கப்

இஞ்சி விழுது               -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை              -      15

பச்சை மிளகாய்             -      1

உப்பு                         -      தேவையான அளவு

தண்ணீா்                    -      தேவையான அளவு

நெய்                        -      தேவையான அளவு

செய்முறை

காரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்யவும்

காரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்

வெங்காயம் பச்சை மிளகாய் மல்லிஇலை கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒர பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும்

உப்பு சோ்க்கவும்

துருவிய காரட்டை சோ்க்கவும்

நறுக்கிய வெங்காயம் மல்லி இலை சோ்கக்வும்

பச்சை மிளகாய் இஞ்சி விழுது சோ்க்கவும்

நன்றாக பிசைந்து கொள்ளவும்

 நன்றாக மிக்ஸ் ஆன பின்

சிறிது தண்ணீா் சோ்க்கவும்

நன்றாக பிசைந்து கொள்ளவும்

 நெய் சோ்க்கவும்

சப்பாத்தி மாவு பிசைவதைப் போல் பிசைந்துக் கொள்ளவும்

ஈர  துணியால் மூடி 15 நிமிடம் வைக்கவும்

பின்பு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

பின் சப்பாத்தி கல்லில் வைத்து பரத்தி எடுக்கவும்

பின்பு சப்பாத்தியை சூடான தாவாவில் போட்டு வேக வைக்கவும்

சப்பாத்தியின் மேல் நெய் சோ்க்கவும்

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு

 மறு பக்கமும் வேக வைத்து எடுக்கவும் 

 

இப்போது சுவையான காரட் சப்பாத்தி ரெடி !!!!!!!

.