சப்பாத்தி ரெசிபி / CHAPPATHI RECIPE

Posted in சப்பாத்தி வகைகள்

தேவையான பொருட்கள்

மைதா – 1 கப்

கோதுமை மாவு – ½ கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

சூடான நீர் – தேவைக்கு

சப்பாத்தி செய்ய

அரிசி மாவு – 2 மேஜைக்கரண்டி

எண்ணெய் / நெய் – தேவைக்கு

செய்முறை

மாவு பிசைய தேவையான பொருட்களை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

சூடான நீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து அதனை மூடி 30 நிமிடங்கள் தனியே வைக்கவும்.

பின்பு பிசைந்த மாவினை சம அளவுள்ள துண்டுகளாக பிரித்து அவற்றை பந்து போல் உருட்டிக் கொள்ளவும்

பின்பு அவற்றில்இரண்டு பந்துகளை எடுத்துக் கொள்ளவும்

சப்பாத்தி கட்டையால் படத்தில் உள்ளது போல் உருட்டிக் கொள்ளவும்

அவற்றின் மீது எண்ணெய் தடவிக் கொள்ளவும்

அதன் பின் அவற்றின் மீது அரிசி மாவை தடவிக் கொள்ளவும்

இரண்டு சப்பாத்திகளையும் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக் கொள்ளவும்


மீன்டும் அதனை சப்பாத்தி கட்டையால் மெல்லியதாக உருட்டிக் கொள்ளவும்

பின்பு சூடான தவாவில் வைத்து சுட்டெடுக்கவும்

இரு பக்கங்களையும் வேக வைக்கவும்

பின்பு அதனை எடுத்து தனித் தனியே பிரித்துக் கொள்ளவும்

பின்பு அவற்றை முக்கோணங்களாக மடித்துக் கொள்ளவும்

சப்பாத்தி ரெடி!!!!! பின்பு சூடாக பரிமாறவும்

Wheat Health Benefits And Nutrition Facts

.