சர்க்கரை பொங்கல் / SWEET PONGAL

Posted in பொங்கல் வகைகள்

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி              –        1 கப்

பாசிப் பருப்பு        –        ½கப்

பால்                 –        5 கப்

வெல்லம்            –        2 கப் (துருவியது)

முந்திரி பருப்பு      –        3 மேஜைக்கரண்டி

கிஸ்மிஸ்           –        3 மேஜைக்கரண்டி

ஏலக்காய்             –        5

நெய்                –        ¼ கப்

தேங்காய்            –        ½ கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தை எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

கடாயில் சிறிது நெய் விட்டு சூடாக்கவும்

அதனுடன் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு பா்ததிரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் அரிசியை சேர்க்கவும்

இரண்டையும் சிறிது நேரம் ஊற வைக்கவும்

பின்பு அவற்றை வடிகட்டி பிரஷர் குக்கரில் போடவும்

அதனுடன் பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்.

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

அரிசி வெந்ததும் வெல்லக் கரைசலை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

மீண்டும் கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்

முந்திரி பருப்பு மற்றும் கிஸ்மிஸ் சேர்க்கவும்

பின்பு அரிசியை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

சிறிது நேரம் வேக வைக்கவும்

 

பின்பு சூடாக பரிமாறவும்

Milk Health Benefits And Minerals

.