மஞ்சள் பொங்கல் / YELLOW PONGAL

Posted in பொங்கல் வகைகள்

 

தேவையான பொருட்கள்:

அரிசி                   -      1 கப்

பாசிப் பருப்பு          -      1/2 கப்

சீரகம்                      -       2 தேக்கரண்டி

நல்ல மிளகு          -      2 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட

உப்பு                   –      தேவையான அளவு

மஞ்சள்தூள்         -      1 தேக்கரண்டி

நீர்                     -      5 கப்

நெய்                  -      1மேஜைக்கரண்டி

செய்முறை:

அரிசியை எடுத்துக் கொள்ளவும்(பச்சரிசி பயன்படுத்தலாம்)

பாசிப் பருப்பு சேர்க்கவும்

இரண்டையும் நன்கு சுத்தம் செய்யவும்

ஒரு பிரஷர் குக்கரில் இரண்டையும் எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்த்து வேக வைக்கவும்

பின்பு நல்ல மிளகு, சீரகம்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்

 

நன்கு கலக்கவும்

குக்கரை மூடி வைத்து வேக வைக்கவும்

அரிசி மற்றும் பருப்பு வெந்ததும் 

அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்

 

நன்கு கிளறவும்

பின்பு பரிமாறவும்

Black Pepper Health Benefits And Minerals

.