ரவா கிச்சடி / RAVA KICHADI

Posted in டிபன்

தேவையானவை:

ரவை                                   -      250 கிராம்,

பச்சை பட்டாணி (தோல் உரித்தது)      -      ஒரு கப்

காரட்                                   -      ஒன்று

இஞ்சி                                  -      ஒரு சிறிய துண்டு

பச்சை மிளகாய்                         -      ஒன்று 

மஞ்சள்தூள்                             -      கால் டீஸ்பூன்

வறுத்த முந்திரிப்பருப்பு                  -      10

நெய்                                    -      50 மில்லி

உப்பு                                    -      தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு ரவையை பொன்னிறமாக வறுக்கவும். கேரட்டை தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கேரட்டை நெய்யில் வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, ரவையுடன் கலக்கவும். ஒரு வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தேவையான உப்பு சேர்த்து, ரவை - காய்கறிகள் கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரிப்பருப்பு தூவவும்.

Green Peas Health Benefits And Minerals

Carrot Health Benefits And Minerals

.