தேப்ளா

Posted in டிபன்

கோதுமை மாவு - 1 கப்,

கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,

ரவை - 2 டேபிள்ஸ்பூன்,

வெள்ளை எள் - சிறிது,

மிளகாய் தூள் - அரை டேபிள்ஸ்பூன்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

தயிர் - 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

பச்சை மிளகாய் -1,

இஞ்சி - 1 சிறிய துண்டு,

பூண்டு - 2 பல்.

எப்படிச் செய்வது? 

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்சியில் அரைத்து மற்ற பொருள்களுடன் சேர்த்து சப்பாத்தி மாவு போலப் பிசைந்து, சப்பாத்தி செய்யவும். இந்தச் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளக் கூட எதுவுமே தேவையில்லை. இதையே நான்காக வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தும் பரிமாறலாம்

.