காக்ரா சாட்

Posted in டிபன்

காக்ரா

10 அல்லது 12, பெரிய வெங்காயம்-       1 (நறுக்கியது),

துருவிய தக்காளி                        -       1 கப்,

துருவிய மக்காச் சோளம்              -       1 கப்,

பனீர்                                       -        1 கப்,

உப்பு                                       -       தேவைக்கேற்ப,

மிளகாய் தூள்                           -        1 டீஸ்பூன்,

சாட் மசாலா                             -       1 டீஸ்பூன்,

கொத்தமல்லி                            -       அரை கட்டு,

எண்ணெய்                                -        சிறிது.

எண்ணெய் சூடானதும், வெங்காயத்தில் முக்கால் பகுதியை வதக்கவும். தக்காளி சேர்த்து, தளதளவெனக் கொதிக்கும் வரை சுருள வதக்கவும். பனீர், துருவிய மக்காச்சோளம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக்கி, கொதித்த பின் இறக்கி வைக்கவும். 

மக்காச்சோளத்துக்குப் பதில் வெந்த பட்டாணியை உபயோகிக்கலாம். ஒரு தட்டில் காக்ராவை பெரிய துண்டுகளாக உடைத்துப் போட்டு, அதன் மேல் தயாராக வைத்துள்ள பனீர், மக்காச்சோள மசாலா கலவையை சிறிதளவு தூவவும். 

மீதமுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுறுசுறுப்பாகப் படிக்க காக்ரா சாட் சாப்பிடலாம் 

குறிப்பு

 காக்ரா

(பெரிய கடைகளில் கிடைக்கும். அல்லது மீந்து போகும் சப்பாத்தியை சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் போட்டு, கையில் ஒரு மெல்லிய துணியை வைத்துக் கொண்டு ஒத்தி ஒத்தி எடுத்தால் தகடு போல வரும். நெய், எண்ணெய் எதுவும் போடாமல்டப்பாக்களில் பத்திரப்படுத்தி உபயோகிக்கலாம்)-

 Onion Health Benefits And Minerals

Tomato Health Benefits And Minerals

 

.