ப்ரைட் இட்லி Fried Idly

Posted in டிபன்

தேவையான பொருட்கள்:

இட்டலிகள்               -      5

மைதாமாவு              -      5 தேக்கரண்டி

பிரட் கிரம்ஸ்            -      அரை கப்

கடுகு                     -      தாளிக்க

உளுத்தம் பருப்பு      -      தாளிக்க

உப்பு                      -      தேவைக்கேற்ப

மிளகாய் தூள்           -      தேவைக்கேற்ப

எண்ணெய்               -      தேவைக்கேற்ப

கருவேப்பிலை          -     தேவைக்கேற்ப

தயார் செய்யும் முறை:

முதலில் இட்டலிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 பின்பு தனியாக மைதாமாவுடன் மிளகாய்தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

 இப்போது இட்டலி துண்டுகளை மைதா மாவுடன் புரட்டி பின்பு பிரட் கிரம்ஸுடன் லேசாக புரட்டி தனியாக வைக்கவும்.

 இப்போது வாணலியில் எண்ணை விட்டுசூடானதும் கடுகு ,உழுத்தம் பருப்பு ,கருவேப்பிலை போட்டு தாளித்துபின்பு இட்டலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.

 மீதமுள்ள இட்டலிகளை இவ்வாறு ப்ரை செய்து தொட்டுக்கொள்ள ஏதாவது சாஸ் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Black Beans Health Benefits And Minerals

.