கோதுமை மாவு அப்பம் / WHEAT APPAM

Posted in டிபன்

கோதுமை மாவு       - 200 கிராம்

மைதா மாவு          - 4 மேஜைக்கரண்டி

தேங்காய்             - அரை மூடி   

வெல்லம்             - 5 அச்சு

எண்ணெய்            - தேவையான அளவு.

தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தைப் பொடி செய்யவும். கோதுமை மாவையும், மைதா மாவையும் நன்றாக சேர்த்து நீர் ஊற்றிக் கரைத்து அதில் வெல்லம் + தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். 

பின்னர் தோசைக் கல்லிலோ அல்லது குழிப் பணியாரக் கல்லிலோ ஊற்றி வேக வைக்கவும். 

ஆட்டிய மாவு புளிக்காமல் இருக்க அதை காற்றுப் புகாத டப்பாவில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

.