மசாலா அட்டு / MASALA ATTU

Posted in டிபன்

பச்சரிசி                  -       அரை ஆழாக்கு

புழுங்கல் அரிசி        -        அரை ஆழாக்கு

கடலைப் பருப்பு       -        100 கிராம்

துவரம் பருப்பு          -       100 கிராம்

உழுந்து                -       50 கிராம்

பச்சை மிளகாய்        -       5

சோம்பு                  -       1 டேபிள்ஸ்பூன்

கடுகு                    -       1 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம்   -       10

கறிவேப்பிலை         -      2 கொத்து

உப்பு                     -      தேவையான அளவு

தேங்காய்               -      அரைமூடி

எண்ணெய்             -       200 மில்லி. 

என்னென்ன தேவை? 

பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் கடலைப்பருப்புதுவரம்பருப்பு, உளுந்து மூன்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். சோம்பைத் தூளாக்கிக் கொள்ளுங்கள். 

அரிசிமாவில், அரைத்து வைத்துள்ள பருப்பு, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, சோம்புத்தூள், தேங்காய்ப்பூ சேர்த்து தேவையான அளவு  உப்புச் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுந்துநான்கைந்து கறிவேப்பிலை இலை போட்டுத் தாளித்து மாவில் கொட்டி நன்கு கலந்து, தோசைக்கல்லில் சின்ன சின்ன வட்டங்களாக ஊற்றிஎண்ணெய் விட்டு வேக வையுங்கள். மசாலா அட்டு ரெடி.

Black Beans Health Benefits And Minerals

.