பெசரப்பப்பு பப்பட்லு

Posted in டிபன்

மைதா                       -        ஒன்றரை கப்

பாசிப்பருப்பு                 -        1 கப்

வெல்லத்தூள்               -        1 கப்

சர்க்கரை                     -        1 டேபிள்ஸ்பூன்

உப்பு                          -        தேவையான அளவு

எண்ணெய்                   -       100 மில்லி

நெய்                          -        100 கிராம்

ஏலக்காய் தூள்             -        அரை டீஸ்பூன்.

எப்படி செய்வது? 

மைதா மாவில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, மேலே எண்ணெய் விட்டு 2 மணி நேரத்துக்கு நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள் (ஊறினால்தான் மாவு மென்மையாகும்).பாசிப் பருப்பை அலசி தண்ணீர் சேர்த்து குழைந்து போகாமல்  வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பில், வெல்லத் தூள் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து  பிசைந்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.மைதா மாவையும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்  கொள்ளுங்கள். வாழை இலையில் மைதா உருண்டையை வைத்து கைகளால் அழுத்தி வட்டவடிவில் பரப்பி அதன் மேல் பருப்பு உருண்டையை  வைத்து, பருப்புக்கலவை வெளியில் தெரியாதவாறு விளிம்புகளை மடித்து மீண்டும் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு வேக வையுங்கள்.  ஆந்திர பாரம்பரியம் மணக்கும் பெசரப்பப்பு பப்பட்லு ரெடி.

 

.