சேமியா பகாளாபாத் / VERMISELLI RECIPE

Posted in டிபன்

சேமியா - 1 பாக்கெட்,

தயிர் - 2 கப்,

பால் - 2 கப்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,

பச்சை மிளகாய்,

இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது.

அலங்கரிக்க...

விதையில்லாத திராட்சை,

துருவிய கேரட் - அரை கப்,

கொத்தமல்லித் தழை - சிறிது. 

எப்படிச் செய்வது? 

 

சேமியாவை சிறிது எண்ணெயில் லேசாக வறுக்கவும். அகலமான பாத்திரத்தில் 2 மடங்கு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.  அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக விடவும். பிறகு உப்பு, பால், சிறிது தயிர் சேர்க்கவும். மற்ற பொருள்களையும் சேர்த்துக் கலக்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களையும் மேலே தூவி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறுவதற்கு முன் மீதி தயிரையும் சேர்த்துக் குளிரக் குளிர சாப்பிடவும்.

.