புழுங்கலரிசி அடை / PARBOILED RICE ADAI

Posted in டிபன்

புழுங்கலரிசி -400மில்லி

பச்சரிசி-200மில்லி

துவரம்பருப்பு-100மில்லி

கடலைபருப்பு-100மில்லி

உளுந்தம் பருப்பு-100மில்லி

பெருங்காயம்-5 கிராம் அல்லது சிறிதளவு

காய்ந்த மிளகாய் -6 அல்லது 7

எண்ணெய் -தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது? 

புழுங்கலரிசி மற்றும் பச்சரிசியை நன்றாக கழுவித் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு பருப்பு வகைகளையும் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊறினால் போதுமானது. முதலில் அரிசியை மிளகாய், வற்றல், பெருங்காயத்துடன் அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும் நன்றாக கழுவி கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பருப்பை மை போல் அரைக்கக்கூடாது. உப்பைபோட்டு நன்றாக கலந்து கறிவேப்பிலை கொத்துமல்லியை பொடியாக நறுக்கி மாவில் போட்டு கலக்கவும். அரைத்து அரை மணிநேரம் மாவை அப்படியே வைக்கவும். பிறகு அடைக்கல்லில் கெட்டியான மாவை 2கரண்டி போட்டு கனமாக தட்டலாம்..  அடைக்கு நடுவில் கரண்டியால் ஒட்டை போட்டு எண்ணெய் விட்டு பிறகு அடையைச் சுற்றி எண்ணெய் வார்க்கவும். நல்ல சிவப்பாக கரகரப்பாக வாசனையாக இருக்கும். மாவை தண்ணீர் விட்டு கரைத்து வார்க்கலாம். அடைக்கு தேங்காய்த்துருவல்  அல்லது பொடியாக நறுக்கிய வெங்காயம் இவற்றை போட்டும் வார்க்கலாம். அடை நமது பராம்பரிய சிற்றுண்டி.

 

 

.