மிளகு அடை / PEPPER ADAI

Posted in டிபன்

A11555_11.jpg - 51.76 KB

புழுங்கல் அரிசி - அரை கிலோ
கடலைப்பருப்பு - 200 கிராம்
மிளகாய் வற்றல் - 25
தேங்காய் - ஒன்று
பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு
கல் உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்+2 மேசைக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

 cooking.jpg - 18.28 KB

தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

 A11555_01.jpg - 52.68 KB

ஒரு பாத்திரத்தில் அரிசி, கடலைப்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

 A11555_02.jpg - 47.00 KB

கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் இஞ்சி ஆகியவற்றை போட்டு கொரக்கொரப்பாக அரைக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை போட்டு 2 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும். பெருங்காயத் துண்டையை மாவில் போட்டு அரைத்துவிடவும்.

 A11555_03.jpg - 46.66 KB

அரைத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 A11555_04.jpg - 34.75 KB

வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பெருங்காயத் தூளாக இருந்தால் தாளிக்கும் போது போட்டு தாளிக்கவும்.

 A11555_05.jpg - 40.38 KB

தாளித்ததும் மிளகு, சீரகம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும்.

 A11555_06.jpg - 51.26 KB

அனைத்தும் பொரிந்ததும் தாளித்தவற்றை அரைத்து வைத்திருக்கும் மாவில் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

 A11555_07.jpg - 52.83 KB

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்திருக்கும் மாவை 2 குழிக்கரண்டி அளவு ஊற்றி, நடுவில் கரண்டியை வைத்து அழுத்திவிடவும்.

 A11555_08.jpg - 39.34 KB

அடை மொத்தமாக இருப்பதால் அடிபிடித்து விடாமல் இருக்க தீயை குறைத்து வைத்து மூடிபோட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.

 A11555_09.jpg - 33.81 KB

3 நிமிடங்கள் கழித்து திருப்பி போடவும். திருப்பி போட்ட பின் மூடவேண்டாம். மேலும் 3 நிமிடங்கள் கழித்து வாணலியில் இருந்து எடுத்துவிடவும்.

 A11555_10.jpg - 43.12 KB

சுவையான மிளகு அடை தயார். இதற்கு தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். விருப்பப்பட்டால் தேங்காயை துருவி போடாமல் சிறு சிறு பல்லாக கீறிப் போட்டும் செய்யலாம்.

 A11555_11.jpg - 51.76 KB

அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

.