சுருள் பிட்டா

Posted in டிபன்

பச்சரிசி - 2 கப்,

சோடா உப்பு - சிறிது,

உப்பு - தேவைக்கேற்ப,

தண்ணீர் - சிறிது,

நெய் - தேவைக்கேற்ப.

பூரணத்துக்கு...

துருவிய தேங்காய்,

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,

சிறிது வேர்க்கடலை,

காரத்துக்கேற்ப பச்சை மிளகாய்,

உப்பு - தேவைக்கேற்ப

(எல்லாவற்றையும் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்).

எப்படிச் செய்வது?

பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இது தோசை மாவைவிட சற்று நீர்க்க இருக்க வேண்டும். சோடா உப்பு சேர்க்கவும். நான்ஸ்டிக் தோசைக்கல்லைக் காய வைத்து, அரைத்து வைத்துள்ள மாவில் சிறிதை ஊற்றி, சுழற்றவும். தீயைக் குறைத்து வைக்கவும். மாவின் நடுவே சிறிது பூரணத்தை வைத்து மெதுவாக அழுத்தி விடவும். சுற்றிலும் நெய் விட்டு, மெதுவாகச் சுருட்டி, திருப்பிப் போடவும். மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும். காரப் பூரணம் பிடிக்காத பிள்ளைகளுக்கு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய், முந்திரி சேர்த்தும் இதே முறையில் செய்து தரலாம்.

.