கேரட் -சீஸ் -வெங்காய ஊத்தப்பம் / CARROT CHEESE & ONION UTTAPPAM

Posted in டிபன்

அரைப்பதற்கு:

புழுங்கல் அரிசி - 4 கப்,

முழு உளுந்து - 1 கப்,

துவரம் பருப்பு - கால் கப்,

வெந்தயம் - 4 டீஸ்பூன்,

உப்பு- தேவைக்கேற்ப.

ஊத்தப்பத்துக்கு:

பொடியாக நறுக்கிய வெங்காயம்,

பச்சை மிளகாய், இஞ்சி,

பூண்டு, கொத்தமல்லி, துருவிய கேரட்,

துருவிய சீஸ், எண்ணெய் - தேவைக்கேற்ப. 

 

அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து வைக்கவும். தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும். தோசைக் கல்லை சூடாக்கி, ஒரு குழிக் கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவி, 1 டீஸ்பூன் எண்ணெயைச் சுற்றிலும் விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும். ஜாக்கிரதையாக திருப்பிப் போட்டு, தேவையானால் இன்னொரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, பரிமாறுவதற்கு முன், சீஸ் துருவல் சேர்த்துக் கொடுக்கவும்.

.