மாம்பழ கேசரி / MANGO FRUIT KESARI

Posted in ப்ருட் ரெசிபி

தேவவையான பொருட்கள்

மாம்பழம்            –        1.5 கப்

சர்க்கரை             –        3/4 கப்

குங்குமப் பூ          –        ஒரு சிட்டிகை(விரும்பினால்)

ஏலக்காய் பொடி     –        1 தேக்கரண்டி

ரவை                –        1 கப்

நீர்                  –        1.5 கப்

நெய்                –        3 மேஜைக்கரண்டி

செய்முறை

மாம்பழத்துடன் ஏலக்காய் தூள், குங்குமப் பூ, சர்க்கரை, சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

15 நிமிடங்கள் தனியே வைக்கவும். கடாயில் நெய்விட்டு சூடானதும் அதில் ரவையை போட்டு மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு முந்திரியை பொரித்துக் கொள்ளவும். முந்திரி லேசாக பொன்னிறமானதும் உலர் திராட்சை சேர்க்கவும். பின்பு அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியே வைக்கவும்.

பின்பு அதே பாத்திரத்தில் 1.5 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ரவையை மெதுவாக நீரில் போட்டு கொண்டே தொடர்ந்து நன்கு கிளறவும்

நீர் முழுவதும் ஆவியாகும் வரை நன்கு கிளறிக் கொண்டிருக்கவும்.

பின்பு ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அரைத்த மாங்காய் விழுது சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு அதனை மூடி 10 -15 நிமிடங்கள் வைக்கவும்.

பின்பு அதன் மீது முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பரிமாறவும். மாம்பழ கேசரி ரெடி!!!!!!!!!!

.