மாம்பழ ஜெல்லி / MANGO JELLI

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

மாம்பழம்           –        4

சர்க்கரை            –        ¼ கப் ¾ கப்

அகார் அகார்        –        10 கிராம்

எலுமிச்சை சாறு    –        1 மேஜைக்கரண்டி

செய்முறை

மாம்பழங்களை எடுத்துக் கொள்ளவும்

தோலுரித்துக் கொள்ளவும்

நறுக்கிக் கொள்ளவும்

அதனை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

ஒரு சாஸ் பானில் அகார் அகாரை எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் நீர் சேர்க்கவும்

10 நிமிடம் ஊற வைக்கவும்

பின்பு அகார் அகார் கரையும் வரை சூடாக்கவும்

மாம்பழ விழுதை வேறொரு சாஸ் பானில் எடுத்துக் கொள்ளவும்


அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்

சர்க்கரை கரையும் வரை வேக வைக்கவும்

பின்பு அதனுடன் அகார் அகார் கலவையை சோ்த்து நன்கு கலக்கவும்

எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு தேவையான அச்சினை எடுத்துக் கொள்ளவும்

மாம்பழ கலவையை அதில் விடவும்

பின்பு அதனை சில மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

 

பின்பு அவற்றை அச்சிலிலுருந்து வெளியே எடுத்து பரிமாறவும்

.