அன்னாசி பழ பாயாசம் / PINEAPPLE KHEER

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி               –        1 கப்

நீர்                     –        2 கப்

அன்னாசிப் பழம்       –        2 கப் (நறுக்கியது)

சூடான பால்            –        500 மிலி

சர்க்கரை               –        ½ கப் + ¼ கப்

ஃபுட் கலர் (yellow)       –        ஒரு சிட்டிகை

செய்முறை

ஜவ்வரிசியை நன்கு கழுவவும்

அதனை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

ஒரு விசில் வரும் வரை வேக வைத்து பின்பு அதனை தனியே வைக்கவும்

பின்பு பாதியளவு அன்னாசி பழத்தை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு சாஸ் பானில் எடுத்துக் கொள்ளவும்

மீதமுள்ள அன்னாசி பழ துண்டுகளை அதனுடன் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

கலவை சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்

சர்க்கரை சேர்க்கவும்

பின்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு தனியே வைத்து ஆற வைக்கவும்

ஒரு சாஸ் பானில் பாலை எடுத்துக் கொள்ளவும்

கொதிக்க வைத்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

ஒரு சாஸ் பானில் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளவும்

சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்

சூடான பாலை அதனுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியே வைத்து ஆற வைக்கவும்

நன்கு ஆறியதும் அன்னாசி கலவையை அதனுடன் சேர்க்கவும்

சில மணி நேரங்கள் குளிர வைக்கவும்

 

அன்னாசி பழ பாயாசம் ரெடி !!!!!!!!!!

.