பன்னீர் புலாவ் / PANEER PULAV

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர்                                                           10-15 சிறிய துண்டுகள்

பாஸ்மதி அரிசி                                  -              1 கப்

வெங்காயம்                                       -              1

பச்சை மிளகாய்                                 -              2-3(காரத்திற்கேற்ப)

இஞ்சி பூண்டு விழுது                        -              1 தேக்கரண்டி

புதினாமல்லித் தளை                       -              1 சிறிதளவு

தேங்காய் பால்                                  -              1/2 கப்

உப்பு                                                                தேவையான அளவு

எண்ணெய் நெய்                                -              1 மேஜைக்கரண்டி

பட்டை                                              -              2

கிராம்பு                                              -              3     

பிரியாணி இலை                               -              1

சோம்பு                                              -              1/4 தேக்கரண்டி(முதலில் தாளிக்க)

செய்முறை

வெங்காயத்தினை நீளமாக மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.புதினா மற்றும் மல்லித்தளையினை பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.அரிசினை தண்ணீரில் கழுவி 5-10 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.

பின்பு பிரசர் குக்கரில்எண்ணெய் நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

 

வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.இத்துடன் நறுக்கிய புதினா மல்லித்தளை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இத்துடன் பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்

இதில் ஊற வைத்த அரிசி, 1/2 கப் தேங்காய் பால், 1 1/2 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து பிரசர் குக்கரை மூடி மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும்(தேங்காய் பால் அதிகம் சேர்க்க தேவையில்லை)

 

குக்கரில் பிரசர் அடங்கியதும் அதனை திறந்து லேசாக கிளறி விடவும்

சுவையான பன்னீர் புலாவ் ரெடி

 

.