தயிர் பன்னீர் ரெசிபி / CURD PANEER RECIPE

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்:

பன்னீர்                    -      200 கிராம் (சிறிதாக வெட்டியது)

சோம்பு                     -      1/2 டீஸ்பூன்

சீரகம்                    -      1/2 டீஸ்பூன்

கடுகு                      -      1/2 டீஸ்பூன்

கருஞ்சீரகம்              -      1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள்      -      1 சிட்டிகை

பச்சை மிளகாய்         -      2 (நீளமாக கீறியது)

மிளகாய் தூள்           -      1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள்            -      1 சிட்டிகை

தயிர்                     -      2 கப் (அடித்தது)

மல்லித் தளை           -      சிறிது (நறுக்கியது)

உப்பு                      -      தேவையான அளவு

எண்ணெய்               -      தேவையான அளவு

செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பன்னீர் துண்டுகளை போட்டு 2-3 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறி, அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து, உப்பு போட்டு, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். (குழம்பு சற்று தண்ணீர் போன்று இருக்க வேண்டுமெனில் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொண்டு கொதிக்க விடலாம்.) குழம்பு நன்கு கொதித்ததும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். இப்போது சுவையான தயிர் பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம், புலாவ் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

Paneer Health Benefits And Minerals

.