பன்னீர் ஃப்ரை / PANEER FRY

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர்                     –        200 கிராம்

எண்ணெய்                  –        பொரிக்க

மாவுக் கலவைக்கு

மைதா                      –        1.5 மேஜைக்கரண்டி

சோள மாவு                 –        3 மேஜைக்கரண்டி

அரிசி மாவு                  –        3 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்               –        1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்           –        1 தேக்கரண்டி

மல்லித் தூள்                –        2 தேக்கரண்டி

ஃபுட் கலர்(சிவப்பு)           –        1 சிட்டிகை

உப்பு                        –        தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது        –        1 மேஜைக்கரண்டி

சோயா சாஸ்               –        1 மேஜைக்கரண்டி

எலுமிச்சை சாறு            –        1 மேஜைக்கரண்டி

நீர்                         –        தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பன்னீரை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

மைதா, அரிசி, சோள மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

அவற்றுடன் மசாலா தூள்கள், உப்பு மற்றும் ஃபுட் கலர் சேர்க்கவும்

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

சோயா சாஸ் சேர்க்கவும்

சிறிது நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு பன்னீர் துண்டுகளை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

 

பன்னீர் ஃப்ரை ரெடி!!!!!!!

.